எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
அரசு தேர்வு எழுதுவோர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுத் தேர்வு ஆணையமான TNPSC தற்போது வெளியிட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம்தேதி நடைபெற்றது. மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிராம நிர்வாக அதிகாரி (VAO) இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைபடம் வரைபவர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த தேர்வுக்காக 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் Group 4 Result எழுத்துத் தேர்வு இன்றைக்கு வெளியாகி உள்ளது. https://apply.tnpscexams.in/result-groupIV என்ற லிங்க்கை க்ளிக் செய்து ரிசல்ட்டை தெரிந்து கொள்ளலாம்.
இந்த லிங்க்கை க்ளிக் செய்ததும், தேர்வு எழுதியவர்கள் தங்களது பதிவெண்ணை சப்மிட் செய்து ரிசல்ட்டை அறியலாம்.
எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதில் tnpsc.gov.in இணைய தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம்செய்ய வேண்டும்.
இந்த சரிபார்ப்பு முடிந்த பின்னர் தகுதிவாய்ந்த நபர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு துறைகள் பிரிக்கப்பட்டு பணியிடங்கள் வழங்கப்படும். இது தேர்வர்களின் தரம், பணியிடத்திற்கான தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.