tnpsc.gov.in. என்ற இணைய தளத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் (TNPSC Group 4 exam Results) வெளியாகும்.
New Delhi: குரூப் 4 தேர்வு முடிவுகள் (TNPSC Group 4 reults) வெளியாகும் விவரத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. கடந்த 1-ம்தேதி நடந்த இந்த தேர்வுக்காக 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வு முடிவுகள் (Group 4 Result) எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிராம நிர்வாக அதிகாரி (VAO) இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைபடம் வரைபவர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதில் tnpsc.gov.in இணைய தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம்செய்ய வேண்டும்.
இந்த சரிபார்ப்பு முடிந்த பின்னர் தகுதிவாய்ந்த நபர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு துறைகள் பிரிக்கப்பட்டு பணியிடங்கள் வழங்கப்படும். இது தேர்வர்களின் தரம், பணியிடத்திற்கான தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.