Read in English
This Article is From Oct 22, 2019

TNPSC நடத்தும் தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வு தேதி அறிவிப்பு!!

கடந்த செப்டம்பர் மாதம் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வை எழுதுவதற்கு சட்டப்படிப்பு முடித்ததுடன், 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாக வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement
தமிழ்நாடு

Multiple Choise Questions அடிப்படையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள் அமைந்திருக்கும்.

New Delhi:

டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) நடத்தும் சிவில் நீதிபதிகள் தேர்வு நவம்பர் 24-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 176 காலிப் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

நவம்பரில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக மார்ச் 2020-ல் நடைபெறும் அடுத்தகட்ட தேர்வை எழுத வேண்டும். 

முதல்கட்டமாக நவம்பர் 24-ம்தேதி நடத்தப்படும் தேர்வில் 100 கேள்விகள் இடம்பெறும். Multiple Choise Questions அடிப்படையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த வினாத்தாள் அமைந்திருக்கும். தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது 40 மதிப்பெண்களை பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.சி - ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு 30 மதிப்பெண்களும், MBC, DC, BC (OBCM), BCM) பிரிவினருக்கு 35 மதிப்பெண்களும் தேர்ச்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 