This Article is From Dec 09, 2019

TNPSC :குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு! நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையம் (TNPSC) நடத்தம் குரூப் 1-ன் முதனைம தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வுக்கு செல்வார்கள்.

TNPSC :குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு! நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு!!

TNPSC Group 1 services exam: நேர்முகத் தேர்வு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31-ம்தேதி வரையில் நடைபெறுகிறது.

New Delhi:

அரசுத் தேர்வு ஆர்வலர்கள் எதிர்பார்த்த TNPSC குரூப் 1-ன் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 23 முதல், டிசம்பர் 31-ம்தேதி வரையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையமான TNPSC தெரிவித்துள்ளது. 

குரூப் 1-ன் MAIN Exam எனப்படும் முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் யார் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தொடர்பான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருக்கிறது. 

நேர்முகத் தேர்வு சென்னை பாரிமுனையில்  
Tamil Nadu Public Service Commission, 
TNPSC Road, 
Chennai-600 003. என்று முகவரியில் அமைந்திருக்கும் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதன்மைத் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்...
 

TNPSC Group 1 Services Main Written Exam Result

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள், தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களையும், உதவி ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதற்கான தேதி, நேரம் குறித்த விவரங்கள் தபால் மூலமாக தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

இதுதொடர்பான தகவல்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் உள்ளன. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும். 

முன்னதாக முதல் நிலைத் தேர்வு எனப்படும் Preliminary Exam கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. 

மொத்தம் 139 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையம் நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாடு சிவில் சர்வீஸ், காவல்துறை, வணிக வரித்துறை, கூட்டுறவுத்துறை, பத்திரப் பதிவுத்துறை, பஞ்சாயத்து மேம்பாட்டுத் துறை, பொதுச் சேவை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைகளில் உயர் பணிகளில் அமர்த்தப்படுவார்கள். 

Click here for more Jobs News

.