This Article is From Jan 10, 2020

TNPSC : தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் குரூப் 1 தேர்வின் இறுதி முடிவுகள் வெளியீடு!!

TNPSC நடத்திய தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும் குரூப் 1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணைய தளமான tnpsc.gov.in -ல் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

TNPSC : தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் குரூப் 1 தேர்வின் இறுதி முடிவுகள் வெளியீடு!!

தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் குரூப் 1 தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

New Delhi:

தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) நடத்திய குரூப் 1 தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனை டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.tnpsc.gov.in ல் பார்த்து அறிந்து கொள்ளலாம். 

முன்னதாக குரூப் 1-ன் இறுதி எழுத்து தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் டிசம்பர் மாதம் நடந்த நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது, இறுதிக்கட்ட முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

Tamil Nadu Group 1 Services Final Result

தேர்ச்சி பெற்றவர்கள் குரூப் 1 பணியிடங்களான தமிழ்நாடு சிவில் சர்வீசஸ், தமிழ்நாடு காவல் பணி, தமிழ்நாடு வணிக வரி பணி, தமிழ்நாடு கூட்டுறவு பணி, தமிழ்நாடு பதிவுத்துறை பணி, தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு பணி, தமிழ்நாடு பொதுப்பணி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் காலியாக உள்ள 139 இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். 

இதேபோன்று டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் தேர்வின் முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சிவில் நீதிபதிகள் தேர்வு நவம்பர் 24-ம்தேதி நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாடு மாநில நீதிப் பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த தேர்வின் வாயிலாக 176 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நவம்பர் 24-ம்தேதி நடைபெற்ற தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மார்ச் 28, 29 -ல் நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். 

எழுத்து தேர்வில் எடுக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள், குரல் முறைத் தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதியாக தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படும். 

Click here for more Jobs News

.