டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான ,www.tnpsc.gov.in. ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் அரசு வேலைகளுக்கான தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என்ற நிலைகளில் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் 2 தேர்வு முறையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
அதாவது, 175 கேள்விகள் பொது அறிவுக் கேள்விகளாகவும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவுக் கேள்விகளாகவும் இருக்கும். முன்னதாக முதல்நிலை தேர்வில் 100 பொது அறிவு 100 மொழிப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த மொழி பாடத்தை ஆங்கிலம்/தமிழ் என இரண்டில் எதை வேண்டுமானலும் தேர்வர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Click here for more Jobs News