டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் விடைத்தாள் மட்டுமே மதிப்பெண்களை துல்லியமாக கணக்கில் எடுத்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும்
TNPSC Group 4 - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 விடைத்தாள் (Answer Key) அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு சில பயிற்சி மையங்கள் வெளியிட்டு வருகின்றன. இருப்பினும், டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் விடைத்தாள் மட்டுமே மதிப்பெண்களை துல்லியமாக கணக்கில் எடுத்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும்.
ஞாயிறன்று நடந்த தேர்வை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ விடைத்தாள் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகிறது.
விடைத்தாள் வெளியிட அதிக நாட்களை டி.என்.பி.எஸ்.சி. எடுத்துக் கொள்ளாது என்று மட்டும் நம்பலாம். சில தகவல்களின்படி எப்போது வேண்டுமானாலும் விடைத்தாள் இணையத்தில் வெளியிடப்படலாம் என்பதை அறிய முடிகிறது.
வி.ஏ.ஓ., ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், சர்வேயர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்காக ஞாயின்று குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களது சான்றிதழ்களை டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம் பிரிவில் 100 கேள்விகளும், பொது அறிவில் 75 கேள்விகளும், மனத்திறன் சோதனையில் 25 கேள்விகளும் தேர்வில் கேட்கப்பட்டன.
விடைத்தாள் வெளியான பின்பு தேர்வர்களுக்கு ஏதேனும் முரண் இருந்தால் அவர்கள் தேர்வாணையத்தில் தெரிவிக்கலாம்.
Click here for more Jobs News