நேரடி லிங்க்: http://www.tnpsc.tech/tech@@/@@GRIV2019@@/
TNPSC Group 4 Answer Key: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி, குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாளை வெளியிட்டுள்ளது. இந்த விடைத்தாள் குறித்து தேர்வு எழுதியோர் மறுப்பு தெரிவிக்கலாம். 7 நாட்கள், அதாவது செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு முன்னர் தேர்வு எழுதியவர்கள் மறுப்பு தெரிவிக்கலாம். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.
TNPSC Group 4 Answer Key: எப்படி மறுப்பைப் பதிவு செய்வது?
முதல் ஸ்டெப்: அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்லுங்கள்- tnpsc.gov.in
இரண்டாவது ஸ்டெப்: விடைத்தாள் குறித்து கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
மூன்றாவது ஸ்டெப்: புதிய விண்டோவில் ஸ்கரால் செய்து பக்கத்தின் கீழே செல்லவும். மறுப்பு தெரிவிப்பதற்கு இருக்கும் லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
நான்காவது ஸ்டெப்: தேவைப்படும் தகவல்களை உள்ளிட்டு, உங்கள் மறுப்பை சமர்ப்பியுங்கள்.
நேரடி லிங்க்: http://www.tnpsc.tech/tech@@/@@GRIV2019@@/
மறுப்பு தெரிவிக்கும்போது இந்த விஷயங்களை நியாபகம் வைத்துக் கொள்ளவும்:
1.டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் இருக்கும் விடைத்தாளின் அடிப்படையில்தான் மறுப்பு தெரிவிக்க வேண்டும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வினாத்தாளின் அடிப்படையில் மறுப்பு தெரிவிக்கப்படக் கூடாது.
2.மறுப்பு தெரிவிக்கும் கேள்வியையும் பதிலையும் தேர்வு செய்த பின்னர், அது குறித்தான ரிமார்க்கையும் உள்ளிட வேண்டும்.
3.மறுப்பு தெரிவிப்பதற்கு சரியான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். எந்த புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறீர்களோ, அது குறித்தான முழு தகவல்களும் இருக்க வேண்டும்.
4.எந்தப் புத்தகத்தில் இருந்து ஆதாரம் எடுக்கிறீர்களோ, அந்தப் புத்தகத்தின் பிடிஎஃப் நகலையும் சமர்பிக்க வேண்டும். அதன் அளவு 3 எம்பி-ஐ தாண்டக் கூடாது.
5.மறுத்து தெரிவித்த பின்னர் வரும் விவரத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.