Read in English
This Article is From Aug 27, 2019

TNPSC: குரூப் - 4 எழுத்து தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம்!!

மொத்தம் 6,491 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான ஹால் டிக்கெட் (TNPSC Group 4 Exam Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியுடன் தேர்வு நிறைவு பெறுகிறது.

Advertisement
Jobs Edited by

TNPSC Group 4 எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ம்தேதி நடைபெறுகிறது.

New Delhi:

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ம்தேதி நடைபெறுகிறது. இதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

செப்டம்பர் 1-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு தேர்வு நிறைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 200 கேள்விகளைக் கொண்டதாக எழுத்துத் தேர்வு அமையும். பொதுப்பிரிவில் இருந்து 75 கேள்விகளும், 25 கேள்விகள் ஆப்டிடியூட் மற்றும் மனத்திறன் பிரிவில் இருந்தும் கேட்கப்படும். மீதம் உள்ள 100 கேள்விகள் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் இருந்து கேட்கப்படும். 

வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்டவற்றில் 6,491 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது.

Advertisement

தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன் விவரம் -

1. தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து புத்தகம், நோட்ஸ், தாள்கள், செல்போன், ப்ளூடூத், வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், கால்குலேட்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி இல்லை. 

Advertisement

2. லாக் டேபிள், ஸ்டென்சில்ஸ், மேப்புகள், ரஃப் தாள்கள் கொண்டு வரக் கூடாது. 

3. தேர்வு அறைக்கு 30 நிமிடம் தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

Advertisement

4. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும். அதற்கு பதிலாக வேறொரு மையத்தில் எழுதினால், விடைத்தால் செல்லாததாக கருதப்படும். 

5. தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக வினாத்தாள் வழங்கப்படும். 

Advertisement

6. வினாத்தாள் வழங்கப்பட்ட பின்னர், அது முழுவதும் அச்சடிக்கப்பட்டுள்ளதா, பழுதின்றி இருக்கிறதா என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறைபாடு ஏதும் இருந்தால் தரப்பட்ட 10 நிமிடங்களுக்குள் கண்காணிப்பாளரிடம் அளித்து மாற்றிக் கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் முறையிட்டால் வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள் மாற்றித் தரப்பட மாட்டாது. 

7. ஹால் டிக்கெட் (Hall Ticket), நீலம் அல்து கருப்பு மை பேனா மட்டுமே தேர்வு அறைக்குள் எடுத்து வர வேண்டும். மற்ற எந்த பொருளை கொண்டுவரவும் அனுமதியில்லை. விதியை மீறுவோர் எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க தகுதியற்றவர்களாக கருப்படுவார்கள். 

Advertisement

8. தேர்வர்கள் மற்றவர்களிடம் இருந்து எந்த பொருளையும் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. 

9. தேர்வு நேரம் நீட்டிக்கப்பட மாட்டாது. அதேபோன்று தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர்கள் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

10. வினாத்தாள் (Question Paper) தவறுள்ளதாக கருதினால் தேர்வு முடிந்த 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் பெயர், பதிவெண், முகவரி, கேள்வி எண், வினாத்தாள் வரிசை எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வினாத்தாள் நகலுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு முறையீடு செய்ய வேண்டும். 2 நாட்களை தாண்டினால் கோரிக்கை ஏற்கப்படாது. 

தகவல் - TNPSC இணைய தளம்

Advertisement