This Article is From Aug 31, 2019

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 4 தேர்வு நாளை - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

கடந்த ஆண்டு, சுமார் 16 லட்சம் பேர் தேர்வை எழுதினார்கள்

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 4 தேர்வு நாளை - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்தத் தேர்வு ஒரே அமர்வில் நடத்தி முடிக்கப்படும். 

New Delhi:

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம் சுமார் 6,491 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்தத் தேர்வு ஒரே அமர்வில் நடத்தி முடிக்கப்படும். 

கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு, பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் ஜூலையில் அறிவிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, சுமார் 16 லட்சம் பேர் தேர்வை எழுதினார்கள். 20 லட்சம் பேர் வரை, தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

குரூப் 4 தேர்வில், மொத்தமாக 200 கேள்விகள் இருக்கும். பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், ஆப்டிட்யூட் மற்றும் திறன் சோதிக்கும் பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் / பொது ஆங்கிலம் பிரிவில் 100 கேள்விகளும் கேட்கப்படும். 

“எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதியுள்ள தேர்வர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். அது டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து தேர்வில் வெற்றியடைந்தவர்கள் தங்களது சான்றிதழ்களை தரவேற்றம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும்” என்று பணிவிவரம் குறித்து வெளியிடப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடத்தப்படும் குரூப் 4 தேர்வு மூலம், டி.என்.பி.எஸ்.சி, வி.ஏ.ஓ, ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர் (டிராஃபட்ஸ்மேன்), தட்டச்சு மற்றும் ஸ்டெனோ-தட்டச்சு நிபுணர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

.