This Article is From Aug 27, 2019

TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC group 4 hall ticket: மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. tnpsc.gov.in, tnpscexams.net அல்லது tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

Advertisement
Jobs Written by

TNPSC Group 4 Hall ticket download: டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டது.

மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. tnpsc.gov.in, tnpscexams.net அல்லது tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும். 

தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட அரசுப்பணிகள் குரூப் 4 தேர்வின் கீழ் வருகின்றன. 

கடந்த முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வினை மொத்தம் 9 ஆயிரத்து 351 பேர் எழுதினார்கள். இந்த முறை தேர்வுக்கான விண்ணப்பம் ஜூன் 14-ல் தொடங்கி ஜூலை 14-ம்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் செப்டம்பர் 1-ம்தேதி ஒரே கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று வெளியாகியுள்ளன. 

Advertisement

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழக அரசில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

ஒருவேளை ஹால் டிக்கெட் இல்லை கிடைக்கவில்லை என்றால் தேர்வாளர்கள் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதின் நகலை contacttnpc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஹால் டிக்கெட் தொடர்பாக ஆக.28 ம் தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு 300 மதிப்பெண்களை கொண்டது. இதில் தேர்ச்சி பெற குறைந்தது 90 மதிப்பெண்களாவது எடுக்க  வேண்டும். பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலம், பொது அறிவு பாடப் பகுதிகளில் இருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 

Advertisement