6,491 காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது
தமிழக அரசில் 6000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கால அவகாசம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் 7 ஆம் தேதி வெளியானது. அதில் ஜூன் 14 முதல் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர், ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 4 அன்று நடக்கவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குரூப் 4 தேர்வுகான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றி முழுமையான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. 6,491 காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.