This Article is From Feb 03, 2020

'TNPSC முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்வார்கள்' - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதுடன், முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

'TNPSC முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்வார்கள்' - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது-

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது, பணி நீக்கம், பணியிடை நீக்கம் போன்ற துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறைக்கு செல்வார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வேலை பறிபோகும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதுடன், முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தனர். இது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. 

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தரப்பிலிருந்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ராமநாதபுர மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களை ரத்து செய்ததுடன், அங்கு தேர்வு எழுதிய 99  பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முறைகேடு விவகாரத்தில் துறை அமைச்சரான ஜெயக்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

தமிழ்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விபரீத விளையாட்டை இளைஞர்களின் எதிர்காலத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு நிகழ்த்தியிருக்கிறது. ஆகவே குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை ‘டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். 


 

.