தமிழகத்தில் இருக்கும் வாக்காளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019, ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயதை அடையும் நபர்களை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் என்ற அடிப்படையில், புதிய வாக்களர் பட்டியலை உருவாக்கம் பணி இன்று முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் 2018 ஜனவரி 1 ஆம் தேதியன்று, தமிழகத்தில் இருந்த வாக்களர்கள் எண்ணிக்கையைவிட, 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனவரி மாதம் தமிழகத்தில் 5.86 கோடி வாக்களர்கள் இருந்தனர். அதில் 2.90 ஆண் வாக்களர்களும், 2.96 பெண் வாக்களர்களும், 5197 மாற்றுப் பாலினத்தவரும் இருந்தனர்.
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 5.82 கோடி வாக்களர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. புதிதாக 1.82 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டனர். அதேநேரத்தில், 5.78 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். போலி வாக்களர் அட்டை, இடம் பெயர்தல், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் வாக்களர் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டு வருவதாகவும், சீக்கிரமே விடுபட்ட வாக்களர்கள் சேர்க்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)