Read in English
This Article is From Sep 27, 2019

தமிழ்நாடு கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது : லிங்க் உள்ளே...

எழுத்து தேர்வு, உடல் அளவீட்டு சோதனை அல்லது உடல் திறன் சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Advertisement
Jobs

முடிவுகளை tnusrbonline.org இந்த தளத்தில் காணலாம்.

New Delhi:

போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்து தேர்வின் முடிவை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது. இந்த குழுமம், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்களையும் கட் ஆப் மதிபெண்களையும் தற்போது வெளியிட்டுள்ளது.  அடுத்த சுற்றுக்கு தகுதியான வேட்பாளர்களின் பட்டியலும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ தளமான tnusrbonline.orgகாணலாம்

மெரிட் தகுதிகான கட் ஆஃப் மதிப்பெண்கள்

போலீஸ் கான்ஸ்டபிள்கள், சிறை வார்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. மொத்தம் 8826 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. 

Advertisement

எழுத்து தேர்வு, உடல் அளவீட்டு சோதனை அல்லது உடல் திறன் சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

“சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் தகுதி பெற்ற நபர்கள் ஆன்லைனில் சமர்பித்த சான்றிதழ்களின் அனைத்தையும் அசலினை எடுத்து வர வேண்டும். அவ்வாறு வரத்தவறினால் வகுப்புவாத இடஒதுக்கீடு, வயது தளர்வு  மற்றும் சிறப்பு ஒதுக்கீடு என எதுவும் வழங்கப்படமாட்டாது.  பதிவேற்றிய சான்றிதழுக்கு பதிலாக மற்றொன்று மாற்று சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement