எழுத்துத் தேர்வில் தகுதிபெற ஒருவர் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெறவேண்டும்.
New Delhi: தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் சப் -இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தாலுகா, ரிசர்வ் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்துறை ஆகியவற்றுக்கான சப் இன்ஸ்பெக்டருக்கான காலியிடங்களை அறிவித்திருந்தது
ஹால் டிக்கெட் TNSURB இணையதளத்தில் கிடைக்கிறது. தேர்வர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல் மூலம் தளத்தில் நுழைய முடியும்.
எழுத்துத் தேர்வு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு பணியின் முதல்கட்டமாகும். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். பகுதி ஏவில் பொது அறிவின் கீழ் 80 கேள்விகள் இருக்கும். பகுதி பிவில் பகுப்பாய்வு, எண் பகுப்பாய்வு, உளவியல் சோதனை, தொடர்பு திறன் மற்றும் தகவல் கையாளுதல் திறன் ஆகிய தலைப்புகளின் கீழ் 60 கேள்விகள் இருக்கும்.
தேர்வு நேரம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் 0.5 மதிபெண்களைக் கொண்டிருக்கும். எழுத்துத் தேர்வின் மொத்த வெயிட்டேஜ் 70 மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் தகுதிபெற ஒருவர் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெறவேண்டும்.
தேர்வர்கள் மெரிட் அடிப்படையில் உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.