Read in English
This Article is From Sep 19, 2018

தமிழக காவல் துறையின் எஸ்.ஐ (டெக்னிக்கல்) தேர்வு: அட்மிட் கார்டு சீக்கிரமே வெளியீடு!

எழுத்துத் தேர்வு 3 மணி நேரத்துக்கு நடக்கும். 28 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வு பெறலாம். 160 கேள்விகளுக்கு கலந்து கொள்பவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

Advertisement
Jobs

எழுத்துத் தேர்வுக்கான அட்மிட் கார்டு தான் சீக்கிரமே வெளியிடப்பட உள்ளது

New Delhi:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், காவல் துறையின் துணை ஆய்வாளர் (டெக்னிக்கல்) பதவி தேர்வுக்கான அட்மிட் கார்டை சீக்கிரமே வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

இந்தப் பணிக்கான இணையதள பதிவு கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதம் முடிந்தது. 309 காலிப் பணியிடங்களுக்கு தற்போது அட்மிட் கார்டு வெளியிடப்படப் போகிறது. tnusrbonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் எஸ்.ஐ (டெக்னிக்கல்) பணிக்கான அட்மிட் கார்டு ரிலீஸ் செய்யப்படும்.

80 மதிப்பெண்களுக்கு நடக்க உள்ள இந்தத் தேர்வில், 30 மதிப்பெண்கள் பொது அறிவையும் 50 மதிப்பெண்கள் தொழில்நுட்ப அறிவையும் சோதிக்கும் வகையில் இருக்கும். இதையடுத்து கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண்களில் இருந்து குறிப்பிட்ட அளவு ஒதுக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும். என்சிசி, என்எஸ்எஸ் போன்றவற்றில் பங்கு பெற்றிருந்தால் அதற்கென்று 5 மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

எழுத்துத் தேர்வு 3 மணி நேரத்துக்கு நடக்கும். 28 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வு பெறலாம். 160 கேள்விகளுக்கு கலந்து கொள்பவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

Advertisement

தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள் வெளியிடப்படும். அதில் ஏதும் ஆட்சேபனை இருந்தால், தேர்வு எழுதியவர்கள் 7 நாட்களுக்குள் மறுப்புத் தெரிவிக்க வேண்டும்.

 

Advertisement
Advertisement