ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த புகைப்படம்
ஹைலைட்ஸ்
- நடிகர், பிசினஸ் மேன் என பன்முகம் கொண்ட அபிஷேக் பச்சனின் 43 வது பிறந்தநாள்
- 'என்றும் சந்தோசமாக இரு. எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்’ - அமிதாப் பச்சன்
- ‘பிறந்த நாள் வாழ்த்துகள் பேஸ்ட் ப்ரெண்ட்’ - நவ்யா
New Delhi: நடிகர், பிசினஸ் மேன் என பன்முகம் கொண்டவர் அபிஷேக் பச்சன். இவர், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனாவார்.
பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன், ஐஎஸ்எல் சென்னையின் FC அணியின் உரிமையாளர். ஐஎஸ்எல் தவிர கபடி லீக்கிலும் ஒரு அணியின் உரிமையாளர் அபிஷேக் பச்சன்.
தூம், குரு, யுவா, டெல்லி 6 முதலிய படங்களில் நடித்துள்ள அபிஷேக் பச்சனின் 43 வது பிறந்த நாள் இன்று. அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், தன் சமூக வலைதளத்தில் அபிஷேக்கின் சிறு வயது புகைப்படத்துடன் ‘என்றுமே நீங்கள் எனது பேபி தான். பிறந்தநாள் வாழ்த்துகள் பேபி' என பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது.
‘என்றும் சந்தோசமாக இரு. எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்' என அமிதாப் பச்சன் வாழ்த்தியுள்ளார்.
அபிஷேக் பச்சனின் சகோதரி ஸ்வேத்தா பச்சன், ‘உன் மீது ந்நன் வைத்துள்ள அன்பை வார்த்தைகளால் கூற முடியாது' என்று தன் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
ஸ்வேத்தாவின் மகளான நவ்யா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் பேஸ்ட் ப்ரெண்ட்' என அபிஷேக் பச்சனை வாழ்த்தியுள்ளார்.