கட்டுமானத்தை நிறுத்துவது தொடர்பான உத்தரவு சில மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Noida: நாட்டின் மற்ற மாநிலங்களை விட டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.
டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர்க் கழிவுகளை மக்கள் எரிப்பதுதான் முக்கிய காரணம். இதனை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்படவில்லை.
இதற்கு அடுத்த கட்டமாக அதிக புகையை எழுப்பும் வாகனங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு உதவும் விதமாக டெல்லி அருகேயுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் சில மாவட்டங்களில் அரசு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கற்களை உடைத்தல், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புகையை கிளப்பும் பணிகளுக்கு வரும் 10-ம் தேதி வரைக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)