Narendra Modi: தகுதியுள்ள இளைஞர்கள் வாக்களிக்க தவறக் கூடாது என்று மோடி கூறியுள்ளார்.
New Delhi: வாக்களித்தல் என்பது புனிதக் கடமை என்றும் வாக்களிக்காவிட்டால் வருத்தப் படுவீர்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மாதந்தோறும் மன் கி பாத் என்ற பெயரில் பிரதமர் மோடி கடைசி ஞாயிற்று கிழமைகளில் பேசி வருகிறார். இன்றைய மன் கி பாத் உரையில் அவர் பேசியதாவது-
மிகச்சிறப்பான முறையில் தேர்தல் ஆணையம் பணி செய்து வருகிறது. 21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் தற்போது வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக மாறியிருப்பார்கள். அவர்கள் முதன்முறையாக மக்களவை தேர்தலில் வாக்களிக்கப் போகின்றனர்.
வாக்களிப்பது என்பது புனிதக் கடமை. அதனை இளைஞர்கள் அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும். வாக்களிக்க தவறிவிட்டால் அதனால் வருத்தப்படுவீர்கள்.
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும். பிரபலங்கள் முன் வந்து வாக்களிப்பது தொடர்பான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.