This Article is From Apr 25, 2020

இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்கவும்: மு.க.ஸ்டாலின்

இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதனால் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்கவும்: மு.க.ஸ்டாலின்

இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்கவும்: மு.க.ஸ்டாலின்

இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும் என்றும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 காலை 6 மணி முதல் 28.4.2020 இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட துறைகள் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33% பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், அரசு எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது என்றும், அதனால், இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, "கொரோனா நோய்த் தொற்றுப் பரவாமல் தடுக்க, பல இடங்களில் (26.4.2020) நாளை தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதனை அனைவரும் உறுதியுடன் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதனால் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது.

எனவே, இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும், அப்போது தனிமனித விலகலைக் கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

.