இன்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 முதல் 9.30 வரை பூமி நேரத்தை அனுசரிக்கலாம்.
New Delhi: பூமி நேரம் இன்று உலகம் முழுவதும் 187 நாடுகளிலும், 7 ஆயிரம் நகரங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையை பூமி நேரத்தை கடைபிடிக்கும் நாளாக கருதுகின்றனர்.
அதன்படி இன்று இரவு இந்திய நேரப்படி 8.30 முதல் 9.30 வரையில் பூமி நேரத்தை நாம் கடைபிடிக்கலாம். இந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக குறைந்தது அரை மணி நேரம் அளவுக்கு மின் விளக்குகளை அணைக்க வேண்டும்.
உலகம் முழுவதும் இவ்வாறு செய்யும்போது, சுற்றுச் சூழலுக்கு இந்த நடவடிக்கை உகந்ததாகவும், பூமி வெப்பமய மாதலுக்கு எதிரான நடவடிக்கையாகவும் அமையும்.
இதுதொடர்பாக தற்போது #Connect2Earth என்ற ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.
முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில்தான் கடந்த 2007-ல் பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த நிகழ்வு பிரபலம் அடைந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் 187 நாடுகளில் 7 ஆயிரம் நகரங்களில் பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது.
உலகின் மிக உயரமான கட்டிங்களான ஈபில் டவர், சிட்னியின் ஓபேரா ஹவுஸ், எம்பைர் ஸ்டேட் பில்டிங், பக்கிங்ஹாம் பேலஸ், எடின்பர்க் கோட்டை உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கு மின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
பூமி நேரத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாளில் நீங்களும் மின் விளக்குகளை குறைந்தது அரை மணிநேரத்திற்கு அணைத்து பூமி நேரத்தை கடைபிடிக்கலாம்.