বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 04, 2019

கற்றல் பாதிப்புடைய குழந்தைகளை கிண்டல் செய்து சர்ச்சையில் சிக்கிய மோடி!

வாசிப்பதிலும், எழுதுவதிலும் சிரமம் கொள்ளும் டிஸ்லெக்ஸியா பாதிப்புடைய குழந்தைகளுக்கு உதவும் திட்டம் குறித்து பொறியியல் மாணவி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினார்

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

ஸ்மார்ட் ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மோடி உரையாற்றினார்.

Highlights

  • ஸ்மார்ட் ஹேக்கத்தானில் மாணவர்களுடன் உரையாற்றினார் மோடி.
  • டிஸ்லெக்சியா பாதிப்பு குழந்தைகளுக்கு உதவ ஆப் கண்டுபிடித்த மாணவர்கள்.
  • ராகுல் காந்தியை குறிப்பிட்டு மோடி கிண்டல் செய்தார்.
New Delhi:

டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைப்பாடு பாதிப்புடைய குழந்தைகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டு கிண்டல் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற ஸ்மார்ட் ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சியில், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, டேராடூனை சேர்ந்த பொறியியல் மாணவி ஒருவர், வாசிப்பதிலும், எழுதுவதிலும் சிரமம் கொள்ளும் டிஸ்லெக்ஸியா பாதிப்புடைய குழந்தைகளுக்கு உதவும் திட்டம் குறித்து கூறினார்.

டிஸ்லெக்ஸியா பாதிப்புடைய குழந்தைகளுக்கு உதவும் வகையில் தங்களிடம் திட்டம் உள்ளது என்றும், தாரே ஜமீன் பார் படத்தில் வருவது போல், அவர்கள் மிகுந்த கற்பனை மற்றம் அறிவாற்றல் உள்ளவர்கள் என அந்த மாணவி கூறிக்கொண்டிருக்கும் போது கூறுக்கிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாணவியிடம் உங்கள் திட்டம் மூலம் 40-50 வயதுடைய குழந்தைகளும் பயன்பெற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
 

அப்போது, மாணவர்கள் கடும் சிரிப்பழைகளும், கைத்தட்டல்களும் எழுந்தது. தொடர்ந்து, அந்த மாணவி முடியும் என்று பிதல் கூற, அதற்கு பிரதமர் மோடி அப்படி என்றால் அந்த குழந்தையின் தாய் மிகவும் சந்தோஷப்படுவார் என்று கூறினார்.

Advertisement

மோடியின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்கட்சியனர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவினர் அனைவரும் ராகுலை தொடர்ந்து குழந்தை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல், ராகுலை குழந்தை என்று கிண்டல் செய்து மோடி பேசியுள்ளார். எனினும் இது, டிஸ்லெக்சியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை கொச்சைப்படுத்துவது போன்றது என சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisement
Advertisement