மக்களவே தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் முரளி மனோகர் ஜோஷி பெயர் இடம்பெறவில்லை.
ஹைலைட்ஸ்
- ஜோஷி எல்.கே.அத்வானிக்கு அடுத்த இரண்டாம் மூத்த தலைவர் ஆவார்.
- தான் போட்டியிடவில்லை என அறிவிக்க வேண்டும் என பாஜகவின் ராம்லால் கேட்டுக்கொ
- ஜோஷி மத்திய அமைச்சராகவும், பாஜக தலைவராக இருந்தவர் ஆவார்.
New Delhi: பாஜக கட்சி தலைமை தன்னிடம் கான்பூர் அல்லது வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளார். எல்.கே.அத்வானியை தொடர்ந்து, 85 வயதான முரளி மனோகர் ஜோஷி, பாஜகவின் இரண்டாம் மூத்த தலைவர் ஆவார்.
எல்.கே.அத்வானி போல் முரளி ஜோஷியும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார். பாஜக பொதுச்செயலாளர் ராம்கோபால் முரளி ஜோஷியிடம் போட்டியிட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார் என தெரிகிறது.
முரளி ஜோஷி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பதை கட்சி முடிவு செய்த பட்சத்தில், தன்னிடம் பாஜக தலைவர் அமித்ஷா, நேரடியாக வந்து கூறியிருக்க வேண்டும் என ஜோஷி எதிர்பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு வெளியிட்ட தகவலில், கான்பூர் உள்ளிட்ட மற்ற எந்த தொகுதியிலும் இந்த மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வேண்டாம் என பாஜக தலைமை கேட்டுக்கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, உத்தர பிரதேச மாநிலத்துக்கான பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 40 பேர் கொண்ட இந்த பட்டியலில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமாபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2014 தேர்தலின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்காக, ஜோஷி தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியை விட்டுக்கொடுத்து கான்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்படி இருக்க பாஜக நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியிலில் கூட ஜோஷி பெயர் இடம்பெறவில்லை.
அத்வானிக்கு 91வயது ஆகியதால், வயதுமூப்பு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல முரளி மனோகர் ஜோஷிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.