Read in English
This Article is From Feb 29, 2020

நோஞ்சான் சிங்கம் ஜூபிடரை காப்பாற்ற புதிய முயற்சி!! தாய் ஜூலியாவுடன் சேர்த்து வைக்கப்பட்டது!

சில ஆண்டுகளுக்கு முன்பு லாஸ் கெய்மேன்ஸ் உயிரியல் பூங்காவுக்கு சிங்கம் ஜூபிடர் கொண்டு வரப்பட்டபோது 250 கிலோ எடை கொண்டதாக இருந்தது. தற்போது 90 கிலோவாகக் குறைந்துள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

இணையத்தில் வைரலான சிங்கம் ஜூபிடரின் புகைப்படம்.

Highlights

  • உயிரில் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டபோது ஜூபிடர் 250 கிலோவாக இருந்தது
  • கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டதால் 90 கிலோவுக்கு குறைந்தது
  • சிங்கத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டுமென நெட்டிசன்கள் வலியுறுத்தல்

கொலம்பியா நாட்டில் நோஞ்சான் சிங்கம் ஜூபிடரை காப்பாற்றி மீண்டும் கம்பீர தோற்றத்துடன் கொண்டு வருவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர். இதன்படி, சிங்கத்தை 2011-ல் மீட்ட அவரது தாயாகக் கருதப்படும் அனா ஜூலியா டாரஸிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் மீண்டும் சிங்கம் ஜூபிடர் கம்பீரத் தோற்றத்துடன் பழைய நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கம் அதனுடைய கம்பீரத் தோற்றத்திற்காகக் காட்டின் ராஜா என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் எழுந்திருக்க முடியாத எலும்பும் தோலுமாகக் காட்சியளித்த ஜூபிடர் என்ற சிங்கத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Jupiter, a diminished 20-year-old lion, upon arrival at the zoo in Cali, Colombia
Photo Credit: AFP

இந்த சிங்கத்தை ஜூலியாதான் வளர்த்து வந்தார். 2011-ல் சிங்கம் ஜூபிடருக்கு அவர் முத்தம் கொடுத்துக் கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலானது. ஜூலியா உயிரியல் காப்பகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, சிங்கத்தை வைத்திருப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி, அதிகாரிகள் சிங்கத்தை ஜூலியாவிடம் இருந்து கடந்த 2019 ஏப்ரலில் பிரித்தனர்.  இதேபோன்று மற்ற மிருகங்களையும் ஜூலியா சரியாகக் கவனிக்கவில்லையென்று குற்றம் சாட்டப்பட்டது.

Defense Minister Carlos Holmes Trujillo announced the lion would be sent home on an air force plane.

Advertisement

இதன்பின்னர் லாஸ் கெய்மேன்ஸ் உயிரியல் பூங்காவுக்குச் சிங்கம் ஜூபிடர் கொண்டு வரப்பட்டது. அப்போது 550 பவுண்டுகள், அதாவது 250 கிலோவாக சிங்கம் இருந்தது. தற்போது, அதன் எடை 90 கிலோவாக உள்ளது.

கூண்டுக்குள் அடைத்து வைத்ததன் காரணமாகச் சிங்கம் எடை குறையத் தொடங்கி விட்டது என்று அதனைப் பல ஆண்டுகள் பராமரித்த ஜூலியா தெரிவித்துள்ளார். 

Advertisement

நோஞ்சான் நிலையில் இருக்கும் சிங்கம் ஜூபிடரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின. இதனால், உள்ளூரிலும், வெளிநாடுகளிலிருந்தும் ஜூபிடரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் ஜூபிடர் அதன் தாயாகக் கருதப்படும் ஜூலியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது கேலி உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோஞ்சான் சிங்கத்தைக் காப்பாற்ற மருத்துவர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

சிங்கத்தின் உடல் நிலை குறித்த அப்டேட்டுகளை நெட்டிசன்கள் எதிர்பார்க்கின்றனர். எலும்பும் தோலுமாகத் திரியும் ஜூபிடர் கர்ஜிக்கும் வரையில் அவர்கள் விடப் போவதில்லை.

 

Advertisement