எது மோசமானது? வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாக பொய் கூறுவதா அல்ல ஏற்படுத்தாமல் இருப்பதா?
New Delhi: வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தராத மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 3 முக்கிய சிக்கல்களை எதிர்கொள்ள உள்ளது. அது, வேலை, வேலை, மற்றும் வேலை என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, எது மோசமானது? வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக பொய் கூறுவதா? அல்லது வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதா? தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது இந்த இரண்டு விஷயங்களிலும் குற்றம் செய்துள்ளது.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 3 முக்கிய சிக்கல்களை எதிர்கொள்ள உள்ளது. அது, வேலை, வேலை, மற்றும் வேலை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 3.32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளது என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை 11.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், அதைக் காட்டிலும் 13.9 சதவீதம் கூடுதலாக அதாவது 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிதிம்பரம் கூறும்போது, இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பு அதன் குரலைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் வேலை உருவாக்கும் அரசாங்கத்தின் போலித்தன கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது. இதே போல மற்ற அமைப்புகளும் வாய்திறக்கும் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.