Read in English
This Article is From Jul 03, 2018

ஆரோக்கியமான எலும்புக்கு தேவையான சத்து நிறைந்த 9 உணவு வகைகள்

ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு தேவயான அளவு கால்சியம், வைட்டமின் டி சத்துக்கள் எடுத்து கொள்ள வேண்டும்

Advertisement
Health

Highlights

  • சர்டைன், சேலமன்,டியூனா மீன் வகைகள் வைட்டமின் டி சத்து நிறைந்தது
  • கீரை வகைகள் கால்சியம் சத்து கொண்டது
  • சீஸ், தயிர், பால் ஆகியவை கால்சியம் சத்து நிறைந்தது

உடல் எலும்புகள் பலவீனத்தால் பெரும்பாலானோர் பாதிப்படைகின்றனர். கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைப்பாடால், எலும்புகள் பலவீனமாகின்றன. ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு தேவயான அளவு கால்சியம், வைட்டமின் டி சத்துக்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

கால்சியம், வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகள்

சர்டைன் மீன்

சர்டைன் மீனில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளன. தினசரி உணவுகளில், பாஸ்தா சாலட் உணவு வகைகளிலும் இந்த மீனை சேர்த்து சாப்பிடலாம்
 

 

சேலமன் மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள சேலமன் மீனில், வைட்டமின் டி சத்தும் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான உடல் இருதயம், எலும்புகளுக்கு இந்த மீன் சாப்பிடலாம்

டியூனா மீன்

வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் நிறைந்தது டியூனா மீன். தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய 39% சூரியசக்தி வைட்டமின்களை கொண்டுள்ளது.

 

தயிர்

உடலுக்கு தேவையான தினசரி கால்சியம் , வைட்டமின் சத்துக்களை தயிர் சாப்பிடுவதன் மூலம் பெற்று கொள்ளலாம்

சீஸ்

பால் பொருட்களில், மற்றொரு முக்கியமான கால்சியம் சத்து நிறைந்த பொருள் சீஸ். சிறிதளவு வைட்டமின் டி சத்தும் கொண்டுள்ளது. சீஸ் பயன்பாட்டை சரியான அளவில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில், உடல் எடை அதிகரிக்க காரணமாகும்

முட்டை

உடலுக்கு தேவையான சத்துக்களை முட்டை அளிக்கின்றது. தினசரி தேவையான 6% வைட்டமின் சத்து முட்டையில் உள்ளது. எளிதாக கிடைக்க கூடிய முட்டைகள் ருசியாகவும் இருக்கின்றன

கீரை வகைகள்

ஒரு கப் சமைத்த கீரையில் 25% அளவு தினசரி தேவைக்கான கால்சியம் கிடைக்கின்றது. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. ஆனால், மழைக்காலத்தில் கீரை வகைகளை குறைத்து கொள்ள வேண்டும்

 

 

பால்

கால்சியம் சத்து அதிகம் நிறைந்த பால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் குடிக்க வேண்டிய பாணம்

ஆரஞ்சு ஜூஸ்

வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த ஆரஞ்சு பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். இந்த உணவு வகைகளை தினசரி சேர்த்து கொண்டால், வலுவான ஆரோக்கியமான உடல் எலும்புகள் இருக்கும்.

Advertisement