Read in English
This Article is From Dec 07, 2018

தலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா...? - உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

இந்திய சட்டப்படி ஒருவரை பணமோசடியில் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்க நேர்ந்தால் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு

Advertisement
இந்தியா

விஜய் மல்லையா தான் வாங்கிய கடனின் முதலை செலுத்த தயராக உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

New Delhi:

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா 62 வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். இவரை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுத்ததில் பொதுத்துறை வங்கிகளும் உண்டு. என்பதால் அவரை ஊடகங்களும் அரசியல்வாதிகள் பலரும் தப்பியோடிய குற்றவாளியாகவே பார்க்கிறார்கள். இந்நிலையில் இன்று விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் போட்டிருந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய நீதிபதி குழு இதை விசாரித்தது. 

இந்திய அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் லண்டனில் புகலிடம் தேடி ஓடிய விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க கோரி கேட்டிருந்தது. இதை எதிர்த்து மனுத் தொடுத்த விஜய் மல்லையாவின் மனுவிற்கு விளக்கம் அளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. 

Advertisement

இதற்கு முன்பு அக்டோபர் 30 அன்று விஜய் மல்லையா கொடுத்த மனுவில்  மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தன்னை தலை மறைவு குற்றவாளி என்று அறிவிக்க கூடாது என்று கேட்டிருந்தார். ஆனால்,  மும்பை சிறப்பு நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய சட்டப்படி ஒருவரை பணமோசடியில் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்க நேர்ந்தால் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு என்பதால் விஜய் மல்லையா தொடர்ச்சியாக  நீதிமன்றத்தில் மனு அளித்தபடி உள்ளார். 

Advertisement

மேலும் விஜய் மல்லையா தான் வாங்கிய கடனின் முதலை செலுத்த தயராக உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement