This Article is From Jul 01, 2019

மம்தா பானர்ஜி மீம்ஸ் வழக்கு: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பாஜக செயற்பாட்டாளர் பிரியங்கா சர்மா நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில் மம்தா பானர்ஜி முகத்தை ஒட்டி மார்பிங்க் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மம்தா பானர்ஜி மீம்ஸ் வழக்கு: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிரியங்கா சிறையில் கொடுமைபடுத்தப் பட்டதாக தெரிவித்தார்

New Delhi:


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விகாரமாக சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டு கைதாகியுள்ள பாஜக செயற்பாட்டாளர் பிரியங்கா சர்மாவை விடுவிப்பதில் தாமதம் ஏன் என்று உச்சநீதிமன்றம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பாஜக செயற்பாட்டாளர் பிரியங்கா சர்மா நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில் மம்தா பானர்ஜி முகத்தை ஒட்டி மார்பிங்க் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அப்படம் வைரலாகிய நிலையில் அவர் மேற்கு வங்க அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பாஜக ஆர்வலரின் சகோதரர் ராஜீவ் சர்மா தாக்கல் செய்த அவமதிப்பு மனு விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இது தொடர்பாக விளக்கம் கேட்டு மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிரியங்கா சர்மா தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மேற்கு காவலர்களால் மே 10 அன்று கைது செய்யப்பட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மே 14 அன்று பிரியங்கா சர்மாவுக்கு உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 
 

.