Read in English
This Article is From Nov 16, 2018

லஞ்சப் புகார் குறித்து விளக்கம் அளிக்க அலோக் வெர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிபிஐ இயக்குனரார் அலோக் வெர்மா மீது ஊழல் கண்காணிப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

Advertisement
இந்தியா ,
New Delhi:

சிபிஐ-ல் ஏற்பட்டிருக்கும் அதிகாரப்போட்டி காரணமாக அதன் இயக்குனராக இருக்கும் அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகிய இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அலோக் வெர்மா மீதான புகார்கள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. இந்நிலையில், தன் மீதான ஊழல் புகார்கள் குறித்து அலோக் வெர்மா வரும் திங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலோக் வெர்மா விவகாரம் தொடர்பான 10 தகவல்கள்

1. ஊழல் கண்காணிப்பு ஆணையம் அளித்துள்ள அறிக்கையின்படி தேவைப்பட்டால் சிபிஐ இயக்குனர் மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

2. அலோக் வெர்மா மீதான புகார்கள் குறித்த அறிக்கையை அவரிடம் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

3. தன் மீதான புகார்கள் குறித்து அலோக் வெர்மா வரும் திங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement

4. அலோக் வெர்மாவின் பதிலைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

5. இன்னும் 2 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

6. அலோக் வெர்மாவுக்கு எதிரான ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை ராகேஷ் அஸ்தனா தனக்கு தருமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

7. தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து லஞ்சப்பணம் பெற்று விட்டதாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தனா குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

8. அதே தொழில் அதிபரிடம் லஞ்சம் பெற்றுவிட்டு விட்டதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா மீது இயக்குனர் அலோக் வெர்மா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

9. நாட்டின் உயர் மட்ட விசாரணை ஏஜென்சி தலைவர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டார்.

Advertisement

10. பிரச்னை விரிவானதை தொடர்ந்து அலோக் வெர்மாவும், ராகேஷ் அஸ்தனாவும் கடந்த அக்டோபர் 23 முதல் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement