Thiruvananthapuram/Jalandhar: திருவணந்தபுரம்: கேரளா கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஜலந்தரை சேர்ந்த பிஷப் பிராங்க்கோவிடம் விசாரணை நடத்த கேரள காவல் துறையினர் ஜலந்தூர் விரைந்துள்ளனர்.
கேரளா கான்வெண்டில் இருந்த போது, கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 13 முறை கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஷப் பிராங்க்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இது குறித்து விசாரணை நடத்த கேரளா காவல் துறையினர் ஜலந்தர் விரைந்துள்ளனர். தொடர்ந்து ஐந்து மணி நேரம் நடைப்பெற்ற விசாரணையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், கன்னியாஸ்திரி தெரிவித்த தேதிகளும், பிஷப் கூறிய தேதிகளும் முரண்பாடாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பிஷப்பின் மொபைல் போனை கைப்பற்றி விசாரிக்க உள்ளனர்.
மேலும், பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப், நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்படுவார் என்று கேரளா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.