This Article is From Nov 22, 2018

3 வயது பேரன், சந்திரபாபு நாயுடுவைவிட பணக்காரர்… எப்படி தெரியுமா?

சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81.83 கோடி ரூபாய் ஆகும்

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 2.53 கோடி ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது

Hyderabad:

வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 8 ஆண்டுகளாக, தனது சொத்துகள் குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். அதன்படி, இந்த முறை அவர் குடும்பத்தின் சொத்து மதிப்பு 12.5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், ‘சந்திரபாபு நாயுடுதான் மிக அதிக சொத்து வைத்திருக்கும் இந்திய முதல்வர். அவரின் மொத்த சொத்து மதிப்பு 177 கோடி ரூபாயாகும்' என்று தகவல் தெரிவித்தது.

அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு தாமாகவே முன் வந்து அளித்துள்ள சொத்து விவரங்களின் பட்டியலை வைத்துப் பார்க்கும்போது, அவர் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81.83 கோடி ரூபாய் ஆகும். இது சென்ற ஆண்டு 69.28 கோடி ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 12.55 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 2.53 கோடி ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதேபோல அவரது மனைவியின் சொத்து மதிப்பு 25 கோடி ரூபாயிலிருந்து 31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷின் சொத்து மதிப்பு, 15.21 கோடி ரூபாயிலிருந்து, 21.40 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல சந்திரபாபு நாயுடுவின் பேரனான தேவான்ஷின் பெயரில் இருந்த 11.54 கோடி ரூபாய் சொத்துகளின் மதிப்பு 18.71 கோடி ரூபாயாக மாறியுள்ளது.

சந்திரபாபு நாயுடு, பாஜக-வுடன் கூட்டணியிலிருந்து, சில மாதங்களுக்கு முன்னர் வெளியேறினார். இதையடுத்து ஆந்திராவில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்களில் தொடர்ந்து ஐடி ரெய்டு நடந்து வருகிறது. இது குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்த நாயுடு, ‘அரசியல் பழிவாங்குதல் காரணமாக இந்த ரெய்டுகள் நடக்கின்றன' என்று கருத்து தெரிவித்தார்.

.