Read in English
This Article is From Jul 22, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியது!

Coronavirus: குறைந்தது 7,53,050 பேர் வரை குணமடைந்துள்ளனர். 28,732 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா

Coronavirus: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியது!

New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 648 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11,92,915 ஆக உயர்ந்துள்ளது. இதில், குறைந்தது 7,53,050 பேர் வரை குணமடைந்துள்ளனர். 28,732 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, குணமடைபவர்களின் விகிதமானது, 63.12 சதவீதமாக உள்ளது. நேற்றைய தினம் மட்டும் 3,43,243 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்து வருவதால், மருந்துகளின் கறுப்பு சந்தைப்படுத்தலை தடுக்க, ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் உள்ளிட்ட உயிர்காக்கும் கொரோனா சோதனை மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளை மகாராஷ்டிரா வழங்கியுள்ளது.

உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் மனிதர்களிடம் சோதனைகளை தொடங்கியதாக திங்கள்கிழமையன்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள் முதல் தரவுத் தொகுப்பிற்கு வருவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.

பெங்களூரில் இன்று முதல் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே பொதுமுடக்கம் இல்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், கொரனோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனது அரசு இரவு பகலாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் திங்களன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் குறைவான நிலையில், நேற்றைய தினம் 1,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, தலைநகரில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,25,096ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 3,690ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமானங்கள் மூலம் டெல்லி விமான நிலையம் வரும் பயணிகள் தங்களது சொந்த செலவில், ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலிலும், அதைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு வீட்டு தனிமைப்படுத்தலிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement