This Article is From Jul 29, 2020

இந்திய எல்லைக்குள் நுழைந்தது 5 ரஃபேல் போர் விமானங்கள்!

பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.59,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்திய எல்லைக்குள் நுழைந்தது 5 ரஃபேல் போர் விமானங்கள்!
New Delhi:

சுமார் 7 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவைக் கடந்து இந்தியாவின் எல்லைக்கு நுழைந்துள்ளது 5 ரஃபேல் போர் விமானங்கள். இந்த விமானங்கள் இந்தியப் பெருங்கடலுக்கு கடற்படை போர்க்கப்பல் மூலம் வரவேற்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்ட உடனேயே, மேற்கு அரேபிய கடலில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கடற்படை போர்க்கப்பல் ஐ.என்.எஸ் கொல்கத்தாவுடன் ரஃபேல் குழு தொடர்பு ஏற்படுத்தியது.

"இந்தியப் பெருங்கடலுக்கு வருக ... மகிமையுடன் வானத்தைத் தொடட்டும்" என்று கடற்படை போர்க்கப்பல் ரஃபேல் தளபதியிடம் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.59,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியாவிற்கு இன்று வந்து சேர்கின்றன.

பாகிஸ்தானின் எல்லையிலிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமானப்படை தளத்துக்கு அருகே பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது, அதன் அருகிலுள்ள நான்கு கிராமங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, விமானம் தரையிரங்கும் போது, மக்கள் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கும், மாடிகளில் கூடுவதற்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

.