நம் கலாசாரத்தின்படி நீங்கள் ஒரு பசுவைத் தொட்டால் எல்லா எதிர்மறையும் போய்விடும் -யசோமதி தாகூர்
Mumbai: மகாராஷ்டிரா அரசின் காங்கிரஸ் எம்.எல்.ஏ யசோமதி தாகூர் பசுவைத் தொட்டால் எதிர்மறைகள் யாவும் அகலும் என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரான யசோமதி தாகூர் மாடுகள் உட்பட எந்த விலங்கை தொடுவது என்பது இரக்கத்துடன் உணரவைக்கிறது என்று கூறினார்.
“நம் கலாசாரத்தின்படி நீங்கள் ஒரு பசுவைத் தொட்டால் எல்லா எதிர்மறையும் போய்விடும்” என்று தியோசா எம்.எல்.ஏ அமராவதியில் நடந்த கூட்டத்தில் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி முகமையிடம் கூறிய போது, “மாடு ஒரு புனிதமான விலங்கு. மாடு அல்லது வேறு எந்த விலங்கை தொட்டாலும் அவற்றைத் தொடுவது என்பது அன்பின் உணர்வைத் தருகிறது. இதில் என்ன தவறு?”என்று கூறியுள்ளார்.
வாஷிம் ஜில்லா பரிஷத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் “நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டோம் ஆனால் இன்னும் எங்கள் பைகளில் வசூல் தொடங்கவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும் மக்கள் எதிர்க்கட்சியிடமிருந்து பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தார்.
சிவசேனா தலைமையிலான அரசு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளாக உள்ளன.