This Article is From Dec 30, 2019

புத்தாண்டில் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றலாம்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

புத்தாண்டில் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றலாம்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

காலை 9.00 மணியில் இருந்து மாலை  6.00 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புத்தாண்டு தினத்தில் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகனந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.   

காலை 9.00 மணியில் இருந்து மாலை  6.00 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்துக்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 04425333333 / 25333444 / 25333857 / 25333850-54 கட்டணமில்லா தொலைபேசி: 180042531111 இணையதள முகவரி: www.tamilnadutourism.org"

.