This Article is From Feb 14, 2019

மார்ச் காலகெடுவுக்கு முன் பீஜிங்கில் அமெரிக்க - சீனா இடையே வர்த்தக சந்திப்பு!

இரு பொருளாதார ரீதியாக மேம்பட்ட நாடுகளின் இருவழி வர்த்தக மதிப்பு மட்டுமே 360 பில்லியன் டாலரை எட்டும். இவர்களின் வர்த்தக போரால் உற்பத்தி துறை மூலமாக உலக நிதி சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.

மார்ச் காலகெடுவுக்கு முன் பீஜிங்கில் அமெரிக்க - சீனா இடையே வர்த்தக சந்திப்பு!

இதனிடையே ட்ரம்ப் - ஜிங்பிங் இடையேயான சந்திப்பு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உயர் மட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் பீஜிங்கில் துவங்கியுள்ளன. இதில் சந்தைகள் மற்றும் சர்வதேச வர்த்தக சூழல்கள் குறித்த இரு நாடுகளுக்கு இடையேயான விஷயங்கள் பேசப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் முடிவுகளை வைத்தே ட்ரம்ப் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது. ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களுக்கான காலாவதி தேதி மார்ச் 1ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் விஷயங்களை சரி செய்யும் அழுத்தம் இந்த பேச்சுவார்த்தையில் நிலவி வருகிறது.

200 மில்லியன் டாலர் சீன இறக்குமதிகளுக்கு விலை உயர்வை டிசம்பர் மாதமே  அமல்படுத்த இருந்த ட்ரம்ப், அதனை மார்ச் 1 வரை நிறுத்தி வைத்திருந்தார். அதற்குள் பேச்சுவார்த்தைகள் சுமூக நிலையை ஏட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இரு பொருளாதார ரீதியாக மேம்பட்ட நாடுகளின் இருவழி வர்த்தக மதிப்பு மட்டுமே 360 பில்லியன் டாலரை எட்டும். இவர்களின் வர்த்தக போரால் உற்பத்தி துறை மூலமாக உலக நிதி சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.

 

ct4i0b1o

 

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் மற்றும் செயலாளர் ஸ்டீவன் முன்சின் சீன வர்த்தக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பீஜிங்கில் இன்று காலை "நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்" என்றார்.

வர்த்தக போரால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த வாரம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே ட்ரம்ப் - ஜிங்பிங் இடையேயான சந்திப்பு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. ட்ரம்ப் அனைத்து சரியாக சென்று கொண்டிருப்பதாக பீஜிங் பேச்சுவார்த்தை குறித்து கூறியுள்ளார்.

தொடர்ந்து சந்தைகள் கண்காணிக்கப்படும் அதனால் அமெரிக்க சீன உறவுகள் பற்றி தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அதனால் ட்ரம்ப் மற்றும் ஜி ஒப்பந்தத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.