This Article is From Nov 06, 2019

Reject RCEP : விவசாயிகள் மற்றும் வர்த்தக அமைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

முன்னணி லாபி குழுமத்தின் பொது செயலாளர் பிரவீன் கண்டேல்வால், “இந்த ஒப்பந்தம், மேட் -இன் சீனா பொருட்களின் இந்திய சந்தையை மிகக் குறைந்த விலையில் மூழ்கடிக்க அனுமதித்திருக்கும். இதனால் நோயுற்ற தன்மை உருவாகியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Reject RCEP : விவசாயிகள் மற்றும் வர்த்தக அமைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

அமுல் நிறுவனம் “வாழ்வாதாரங்களை ஆதரித்தற்காக” நன்றி தெரிவித்துள்ளது

New Delhi:

இந்தியா, Regional Comprehensive Economic Partnership என்றழைக்கப்படும் ஆர்சிஈபி-யில் இணையாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த முடிவினை இந்திய விவசாயிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெகுவாக வரவேற்றுள்ளன. நாட்டின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் “வாழ்வாதாரங்களை ஆதரித்தற்காக” நன்றி தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மற்ற ஆசிய சந்தைகள் இந்தியாவின் அணுகலை அதிகரித்திருக்கும். 

மலிவான மேட் -இன் சீன பொருட்களால் வேளாண்மை, ஜவுளி போன்ற முக்கிய வேலைவாய்ப்பு துறைகளில் உள்நாட்டு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். 

பால் உற்பத்தி நிறுவனமான அமுல் பிரதமர் மோடியின் “முன்மாதிரியான தலைமை மற்றும் ஆதரவை” பாராட்டியது. “இந்த முடிவு, மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரித்து வருமானத்தை இரட்டிப்பாக்கவும் இந்தியாவை பலப்படுத்தவும் உதவும்”  என்று கூறியுள்ளது. 

முன்னணி லாபி குழுமத்தின் பொது செயலாளர் பிரவீன் கண்டேல்வால், “இந்த ஒப்பந்தம், மேட் -இன் சீனா பொருட்களின் இந்திய சந்தையை மிகக் குறைந்த விலையில் மூழ்கடிக்க அனுமதித்திருக்கும். இதனால் நோயுற்ற தன்மை உருவாகியிருக்கும்” என்று  தெரிவித்துள்ளார். 

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனர் பி.எம். சிங் இந்த ஒப்பந்த நிராகரிப்பு “விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று கூறியுள்ளார். 

“மற்ற பெரிய நாடுகளுடன் போட்டியிட முடியாது என்பதால் ஆர்.சி.இபி போன்ற வெளிப்படையான  ஒப்பந்தத்திற்கு செல்லக் கூடாது” என்று தெரிவித்தார். “இது 25 கிலோ எடையுள்ள ஒரு நபரை குத்துச்சண்டை வளையத்திற்குள் எறிந்து, 100 கிலோ எடையுள்ள எதிரியுடன் போட்டியிடச் சொல்வது போன்றது.”

.