This Article is From Apr 09, 2020

சென்னையில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண்காந்தி. இவர் நேற்று (ஏப்.8) வழக்கம்போல் சாந்தோம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையிலே மயங்கி விழுந்துள்ளார்.

சென்னையில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

சென்னையில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • சென்னையில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
  • மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண்காந்தி
  • மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண்காந்தி. இவர் நேற்று வழக்கம்போல் சாந்தோம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையிலே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, சக காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருக்கடியான இக்காலத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை, மனஅழுத்தம் ஏற்படாதவாறு டிஜிபியும், அரசும் அக்கறை காட்ட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள், அதனை கருதி மக்கள் மனசாட்சியோடு வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என , முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். 

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே.

எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது என்று பதிவிட்டிருந்தார்.

.