हिंदी में पढ़ें Read in English
This Article is From Sep 23, 2019

ரூ. 500 கேட்டு தொந்தரவு செய்த டிராபிக் போலீஸ்! பைக்கை தீயிட்டு கொளுத்திச் சென்ற இளைஞர்!!

சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள், டிராபிக் போலீஸ் பணம் கேட்டு வாகன ஓட்டிகளிடம் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

அரசின் புதிய விதிகளின்படி டிராபிக் விதி மீறலுக்கான அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Indore:

ரூ. 500 கேட்டு டிராபிக் போலீசார் பைக் ஓட்டுனர் ஒருவரிடம் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் கடுப்படைந்த அவர், பைக்கை தீயிட்டுக் கொளுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு பைக்கை ஓட்டி வந்த ஒருவர் விதிகளை மீறியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை மடக்கிய டிராபிக் போலீசார் அவரிடம் அபராதத் தொகை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. 

நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி சுமார் ஒரு மணிநேரம் டிராபிக் போலீசுக்கும், பைக் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம், பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. முடிவில் கடுப்படைந்த அந்த நபர், தனது பைக்கை தீயிட்டு கொளுத்தி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். 

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை நேரில் பார்த்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

Advertisement

டிராபிக் போலீசார் தங்களது அடையாளத்தை காண்பிப்பது கிடையாது. இந்த பகுதியில் கார், வேன் என எது வந்தாலும் அதனை மறித்து சோதனை செய்கின்றனர். மக்களிடம் பணத்தை பெறுவதற்காக அவர்கள் இதனை செய்கிறார்கள். என்னை ஒருவர் வழி மறித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் போகிறேன். ரூ. 500 தந்தால் விட்டுவிடுகிறேன் என்று மிரட்டினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய போக்குவரத்து விதி மீறல் அபராதம், மத்திய பிரதேசத்தில் நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும், டிராபிக் போலீசார் அந்த அபராதத்தை கேட்கின்றனர். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
 

Advertisement
Advertisement