Read in English
This Article is From Jul 11, 2018

சாலை விதிகளை மீறினால் எமன் வருவார்- பெங்களூரு போலீஸின் விழ்ப்புணர்வு பிரான்க்

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்- போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்

Advertisement
விசித்திரம்

நீங்கள் சாலை விதிகளை வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லும்போது தீடிரென எமன் வந்து வழியை மறித்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு எமன் நாடகத்தை தான் நடத்தியுள்ளது பெங்களூரு போக்குவரத்து காவல் துறை.

ஹலசுரு கேட் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் அணியாத, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பிற விதி மீறல்களைச் செய்பவர்களுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக எமராஜாவை அம்பாசடராக பயன்படுத்தியுள்ளனர்.

ஜூலை மாதத்தை ஒரு சாலை பாதுகாப்பு மாதமாக நாங்கள் அனுசரிக்கிறோம். இதில் ஒரு பகுதியாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்" என்று போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் “ நாங்கள் எமனை இந்த செய்தியை பரப்புவதற்கான கேரக்டராக பயன்படுத்துகிறோம். போக்குவரத்து நெறிமுறைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் எமன் உங்கள் வீட்டிற்கு வருவார் " என்று அவர் கூறினார்.

Advertisement

வாகன ஓட்டிகளை நிறுத்தி, சாலையின் விதிகளுக்கு ஒத்துழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூடும் இந்த செயலில் பங்கெடுத்தவர், நாடக கலைஞரான வீரேஷ் ஆவார்.

போக்குவரத்து பாதுகாப்பு விதிகள் முக்கியத்துவம் பற்றி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாக உள்ளது. போக்குவரத்துப் போலிஸாரைப் பொறுத்தவரையில், பொது விழிப்புணர்வு இயக்கம் விபத்துகளை குறைப்பதில் உதவுகிறது என்று நம்புகின்றனர்.

இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை, 2,336 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 330 பேர் உயிரிழந்துள்ளனர், என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

கடந்த டிசம்பர் மாத இறுதியில், 5,064 விபத்துகள் நடந்துள்ளன என்றும், இதில் 609 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறினர். 2016 ஆம் ஆண்டில், 7,506 விபத்துகள் நடந்தன, இதில் 754 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement