சென்னையில் பைக்கில் செல்லும் 2 பேரும் ஹெல் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது.
New Delhi: அபராத தொகையை அதிரடியாக உயர்த்திய பின்னர் டெல்லியில் போக்குவரத்து விதி மீறல் 66 சதவீதம் குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018-ல் மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரம் விதி மீறல்கள் நடந்துள்ளன. ஆனால் கடந்த மாதம் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரமாக குறைந்துள்ளது. அபராதத்தை அதிரடியாக உயர்த்தியதுதான் இந்த விதிமீறல் குறைவுக்கு முக்கிய காரணம்.
டெல்லியைப் போன்றே நாட்டின் பல மாநிலங்களிலும் போக்குவரத்து விதி மீறல்கள் கடந்த மாதங்களை விட செப்டம்பரில் கணிசமான அளவுக்கு குறைந்திருக்கிறது.
குறிப்பாக அதிக பொருட்களை ஏற்றி வந்ததற்காக ராஜஸ்தானை சேர்ந்த லாரி டிரைவருக்கு ஒரு லட்சத்தி 41 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.
இதேபோன்று டெல்லியில் அதிக சாமான்களை ஏற்றியது, முறையான ஆவணங்கள் இல்லாமல் வண்டி ஓட்டிய குற்றத்துக்காக ரூ. 2 லட்சம் வரைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
புதிய சட்ட திருத்தத்தின்படி, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் அபராதம் ரூ. 500-லிருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக வேகமாக ஓட்டினால் அபராதம் ரூ. 400 லிருந்த ரூ. ஆயிரமாகவும், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், மதுபானம் அருந்தி விட்டு ஓட்டினால் ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகவும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ. 100 லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது