சம்பவம் நடந்த லண்டனின் பேக்கர் ஸ்ட்ரீட் டியூப் ரெயில் நிலையம்
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சனிக்கிழமை நடந்த சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியையும், கடைசியில் சற்று நிம்மதியையும் ஏற்படுத்தியது.
லண்டனின் பேக்கர் ஸ்ட்ரீட் ட்யூப் ரெயில் நிலையத்தில் தனது குழந்தையை தாய் ஒருவர் தள்ளிச் செல்லும் கூடையில் வைத்து சென்று கொண்டிருந்தார்.
அறிவிப்பு பலகையை பார்த்தவாறே பிளாட்பாரத்தின் முனைக்கு சென்று, குழந்தையுடன் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது கணவர் விரைவாக ஓடிவந்து தண்டவாளத்தில் குதித்து இருவரையும் மீட்க முயற்சி செய்தார். அந்த சமயத்தில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ரெயில் ஒன்று வேகமாக வந்தது.
அப்போது சமயோசிதமாக செயல்பட்ட தந்தை, இருவரையும் தண்டவாளத்தில் படுக்கச் செய்தார். இதையடுத்து 3 பேரின் தலைக்கு மேலே ரெயில் வேகமாகச் சென்றது. அதன்பின்னர் மூவரையும் பத்திரமாக மீட்ட பிரிட்டிஷ் டிரான்ஸ்போர்ட் போலீஸ், அவர்களை மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்தது.
Click for more
trending news