हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From Jul 01, 2019

மும்பையில் நள்ளிரவு முதல் தொடர் கனமழை! போக்குவரத்து சேவைகள் பாதிப்பு

இன்று அதிகாலை 4 முதல் 5 மணி வரை குறைந்தது 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது, ஒரே இரவில் 360 மி.மீ க்கும் அதிகமான பதிவு பதிவாகியுள்ளது, இது மும்பை-வல்சாத்-சூரத் பிரிவில் சில ரயில்களை ரத்து செய்ய வழிவகுத்தது

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)
Mumbai:

மும்பையில் நள்ளிரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தென்மேற்கு பருவமழை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. மும்பையில் நேற்று காலை விட்டு விட்டு லேசாக பெய்த மழை மாலையில் இருந்து வெளுத்து வாங்கியது. இதனால், பல உள்ளூர் ரயில்களும், நீண்ட தூர ரயில்களும் தாமதமாக செல்வதும், ரத்து செய்யப்படுவதுமாக உள்ளது.

போக்குவரத்து சேவை பாதிப்பால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்லும் மக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். பல இடங்களில், ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் தாமதமாக செல்கின்றன.

சீயோன் மற்றும் மாதுங்கா ரயில் நிலையங்களில் இருப்பு பாதை மழை நீரில் மூழ்கின. இதனால் மும்பையில் புறநகர் ரயில்கள் எச்சரிக்கையுடன் இயக்கப்படுகிறது. மேலும் கனமழை காரணமாக 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தீவிர முன்னேற்பாடுகளை மராட்டிய அரசு மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து, மழையில் மூழ்கிய சாலைகள் குறித்து படங்களை ட்விட்டரில் பலரும் பதவிசெய்து வருகின்றனர்.

இதேபோல், தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் கூறும்போது, ஜூலை 3ஆம் தேதி இரவு முதல் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, அவசர உதவி எண்களை மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

(With inputs from ANI)

Advertisement
Advertisement