This Article is From Mar 05, 2019

பெங்களூரிலிருந்து வந்த விரைவு ரயிலில் தீ விபத்து!

எஸ்வந்த்பூர் - டாட்டா நகர் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் கேண்டீனில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பெட்டி முற்றிலும் சேதமடைந்தது.

ரயில் கேண்டீன் முற்றிலும் சேதமடைந்தது

ஹைலைட்ஸ்

  • யஷ்வந்த்பூரில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு சென்ற ரயிலில் தீ விபத்து.
  • மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்க கேண்டீன் பெட்டி பிரிக்கப்பட்டது.
  • கேண்டீன் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை.
New Delhi:

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த எஸ்வந்த்பூர் - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாலை 2 மணியளவில் ரயிலின் கேண்டீன் பெட்டியில் இந்த விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தீ மேலும் பரவாமல் தடுக்க விபத்து ஏற்பட்ட பெட்டியை ரயில் ஊழியர்கள் தனியாக கழற்றி விட்டனர்.

பின்னர் தீயை அனைக்க ஊழியர்கள் அனைவரும் முயற்சி செய்துள்ளனர். எனினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த தீ விபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

537ggf6o

இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்தில், ரயிலின் கேண்டீன் பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூருக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

இந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விஜயவாடா- விசாகப்பட்டினம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகின. சம்பவ இடத்தில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.