Read in English
This Article is From Jul 26, 2019

'ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை' - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ. 1 உயர்த்தி அறிவித்தார். இதனால் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்தது. 

Advertisement
இந்தியா Edited by

டீசல் மற்றும் பெட்ரோல்விலை உயர்ந்துள்ள சூழலில் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படுமா என்று காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத் கேள்வி எழுப்பினார்.

New Delhi:

ரயில் கட்டணங்களை தற்போதைக்கு உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

டீசல் மற்றும் பெட்ரோல்விலை உயர்ந்துள்ள சூழலில் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படுமா என்று காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது-

டீசல் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் ரயில்வே கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை. ரயில்வேயை மின் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

100 சதவீதம் ரயில்களை மின்சாரத்தில் இயக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். இது 2022-க்குள் நிறைவேற்ற முடிக்கப்படும்.

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ. 1 உயர்த்தி அறிவித்தார். இதனால் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்தது. 

Advertisement