Trivandrum: கடும் மழை காரணமாக கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் இயக்காமல் வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை, தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கயன்குளம் - கோட்டயம் - எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு - ஷோரனூர் - கோழிக்கோடு ஆகிய வழித் தடங்களில் ரயில்கள் மீண்டும் செல்கின்றன.
திருவணந்தபுரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆலுவா - திருச்சூர், திருச்சூர் - ஷோரனூர், கயம்குளம் - கோட்டயம் - எர்ணாகுளம் ஷோரனூர் - திரூர், ஷோரனூர் - பாலக்காடு ஆகிய ரயில் தடங்களில் இருந்த பாதிப்புகள் நீக்கப்பட்டு சேவை ஆரம்பமாகியுள்ளன.
அதேபோல, திருவணந்தபுரம், திருநெல்வேலி மற்றும் மதுரை - சென்னை, எழும்பூர், ஹௌரா, கோராக்பூர், புபனேஷ்வர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆலுவா- திருச்சூர், திருச்சூர் - ஷோரனூர் ஆகிய பகுதிகளில் இருந்த ட்ராஃபிக்கும் சரி செய்யப்பட்டு விட்டன.
ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை, கேரளாவில் 159 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 11 பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.