Read in English
This Article is From Aug 31, 2019

ஐ.ஆர்.சி.டி.சி.-ல் (IRCTC) புக் செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்கிறது!!

IRCTC Train Ticket Reservation : ரயில் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. (GST) வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

சேவைக் கட்டணம் விதிக்கப்படுவதை தொடர்ந்து டிக்கெட்டுகளில் விலை உயர்கிறது.

New Delhi:

ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தின் வழியே புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகளின் விலை நாளை முதல் உயர்கிறது. டிக்கெட்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் விதிக்கப்படுவதால் விலை உயர்வு ஏற்படுகிறது. 

இதன்படி IRCTC இணைய தளத்தின் வழியே புக் செய்யப்படும் டிக்கெட்டுகளில் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு ரூ. 15-ம், ஏ.சி., முதல் வகுப்புகளுக்கு ரூ. 30-ம் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த தகவலை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது. 

இதேபோன்று ரயில் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ஏ.சி. இல்லாத வகுப்புகளுக்கு ரூ. 20-ம், ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ. 40-ம் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்திருந்தது. இதன்பின்னர் இணையதள டிக்கெட் விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் சேவைக்கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் சேவைக் கட்டணத்தை மீண்டும் நடைமுறைக்கு ஐ.ஆர்.சி.டி.சி. கொண்டு வந்துள்ளது. 

Advertisement

ஐ.ஆர்.சி.டி.சி.யின் முன்பு வசூலிக்கப்பட்டு வந்த சேவைக் கட்டணம் நிறுத்தப்பட்ட பின்னர் 2016-17-ல் மட்டும் 26 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement