திருப்பூர்: (பிடிஐ) கேரள மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் குழு, வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர். சானிடரி நாப்கின்ஸ், எண்ணெய், உணவு ஆகியவை அடங்கிய 30,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேகரித்த திருநங்கைகள், திருப்பூர் மாவட்ட சமூக நல அதிகாரி பூங்கோதையிடம் வழங்கினர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)