This Article is From Nov 14, 2019

P Chidambaram: சிறையில் வழங்கப்படும் சிகிச்சையில் திருப்தியில்லை; குடும்ப வட்டாரத்தின் குற்றச்சாட்டு

“சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நாங்கள் திருப்தியடையவில்லை. அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல இரைப்பைக் குடல் நிபுணர் டாக்டர் நாகேஸ்வர ரெட்டியின் கீழ் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட வேண்டும்” என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

P Chidambaram: சிறையில் வழங்கப்படும் சிகிச்சையில் திருப்தியில்லை; குடும்ப வட்டாரத்தின் குற்றச்சாட்டு

எடை 8-9 கிலோ வரை குறைந்துள்ளது என்றும் உடல்நிலை மோசமைடந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

New Delhi:

நீதித்துறையின் காவலில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்திகரமாக இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

ப. சிதம்பரத்தின் நீதித்துறை காவல் நவம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறையில் அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். அவர் எடை 8-9 கிலோ வரை குறைந்துள்ளது என்றும் உடல்நிலை மோசமைடந்துள்ளது என்றும் தெரிவித்தனர். 

“சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நாங்கள் திருப்தியடையவில்லை. அவர் மிகவும் கஷ்டப்படுகிறார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல இரைப்பைக் குடல் நிபுணர் டாக்டர் நாகேஸ்வர ரெட்டியின் கீழ் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட வேண்டும்” என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மருத்துவர் ரெட்டியின் மூலம் வழங்கப்படும் சிகிச்சை மூலம் ஓரளவு நன்றாக இருந்தார் எனவும் கூறுகின்றனர். நவம்பர் 8 முதல் முன்பதிவு செய்யப்பட்டுள்ள அவரது ஜாமீன் மனு மீதான டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஆகஸ்ட் 21 அன்று சிபிஐ கைது செய்தது. கடந்த புதன்கிழமை வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வீடியோ மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் நவம்பர் 27 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தது. 

.